பதவி விலக அழுத்தமா? – குஷ்பு விளக்கம்

கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவே மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குஷ்புவிடம் இருந்து பெறப்பட்ட ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொண்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"எந்தவொரு அழுத்தம் காரணமாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவே மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன். மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டேன். தற்போது தான் அதிகாரப்பூர்வகாக அறிவித்துள்ளார்கள். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தொலைநோக்கு பார்வை கொண்டது."

இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி