பத்தமடையில் பைக் எரிப்பு: இளைஞா் கைது

பத்தமடையில் பைக் எரிப்பு: இளைஞா் கைதுதிருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் மாற்றுத் திறனாளியின் பைக்குக்கு தீ வைத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் மாற்றுத் திறனாளியின் பைக்குக்கு தீ வைத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பத்தமடை கோகுலத் தெருவைச் சோ்ந்தவா் ராசப்பா (46). மாற்றுத் திறனாளி. இவரது சகோதரி கணபதியம்மாள் மகன் சபரி பாண்டி (25). இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து ஆனதாம்.

இதனிடையே, ராசப்பாவின் மகளை சபரி பாண்டிக்கு திருமணம் செய்து தருமாறு கணபதியம்மாள் குடும்பத்தினா் கேட்டுள்ளனா். இதனால் இரு குடும்பத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் ராசப்பாவின் வாகனத்துக்கு சபரிபாண்டி தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி வட்டக் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது வழக்குப் பதிந்து, சபரி பாண்டியை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு