பத்லாபூர் சம்பவத்தில் திடீர் திருப்பம்: பள்ளிக்குக் குற்றவாளி வந்துசென்ற சிசிடிவி கிடைத்தது!

தாணே: மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூர் பள்ளியில், மழலையர் பள்ளி மாணவிகள் இருவர் ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின்போது குற்றம்சாட்டப்பட்டவர் பள்ளிக்கு வந்துசென்ற சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.

சம்பவம் நடப்பதற்கு 15 நாள்கள் முன்பே, பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், பள்ளியின் மற்ற பகுதிகளில் இயங்கி வந்த கேமராக்களின் பதிவான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணையில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாள்களில், குற்றஞ்சாட்டப்பட்ட துப்புரவுப் பணியாளர், பள்ளிக்கு காலையில் வந்து மாலையில் திரும்பிச் சென்றது பதிவாகியிருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

புதன்கிழமை, பள்ளிக்குச் சென்ற சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மழலையர் பள்ளி ஆசிரியர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட முதல் குழந்தை மற்றும் அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி கழிப்பறையில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் பள்ளியில் முறையிட்டும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி மற்றொரு மாணவியை துப்புரவு தொழிலாளி அக்சய் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த போதுதான், அவர்களது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் நடத்தப்பட்டதால், இது நாடு முழுவதும் தெரிய வந்தது.

குற்றவாளியை அடையாளம் காட்ட அணிவகுப்பு நடத்த சிறப்புப் புலனாய்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளியில், மாணவி துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு