பன்னாட்டு சிறுகதை களஞ்சியம் நூல் வெளியிட்டு விழா 

பன்னாட்டு சிறுகதை களஞ்சியம் நூல் வெளியிட்டு விழா

செங்கல்பட்டு: பன்னாட்டு சிறுகதைக் களஞ்சியம் நூல் வெளியிட்டு விழா செங்கற்பட்டு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் மலேசியா ஈப்போ முத்தமிழ் மன்றம், செங்கல்பட்டு மாவட்ட நூல் (வாசகர்) படிப்போர் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து பன்னாட்டு சிறுகதைக் களஞ்சியம் நூல் வெளியிட்டு நிகழ்வும் மலேசியா ஈப்போ முத்தமிழ் மன்றத்தின் சார்பாக கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழாவும் நேற்று (7.09.2024) மாலை 4.30 மணி அளவில் செங்கற்பட்டு மாவட்ட மைய நூலகத்தில் நிர்வாகி இளைய கட்டப்பொம்மன் தலைமையில் நடைபெற்றது.

தமுஎகச- செங்கற்பட்டு கிளையின் நிர்வாகி சா.கா. பாரதிராஜா வரவேற்புரை ஆற்றினார். இராஜலட்சுமி.வேதாசலம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சு.மாதவன் பன்னாட்டு சிறுகதைக் களஞ்சியம் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். மலேசியா ஈப்போ முத்தமிழ் மன்றத்தின் தலைவர், டாக்டர். அருள் ஆறுமுகம் கண்ணன் நூலிற்கு ஏற்புரையும் சிறப்புரையும் வழங்கினார். தமுஎகச-வின் மாநில துணை செயலாளர் ஏகாதேசி நூல் பெற்றுக்கொண்டு நிறைவுரை ஆற்றினார்.

இறுதியாக கலை இலக்கிய படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமுஎகச செங்கற்பட்டு கிளை தலைவர். பி.வி.இராமமூர்த்தி, கிளைச் செயலாளர். மு.முனிச்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!