பயணம்தான் கல்வியின் சிறந்த வடிவம்..! அஜித்குமாரின் வைரல் விடியோ!

நடிகர் அஜித்குமார் பயணம் குறித்து பேசிய விடியோ சமூக வலைதளத்தில் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நீண்ட நாள்களாக நடித்து வருகிறார். இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை.

இந்தப் படத்துடன் ஆதிக் ரவிச்சந்திரன உடன் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துவருகிறார்.

கார், பைக் பிரியர் அஜித்

கார், பைக்குகள் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.

பிரிட்டனில் நடைபெறும் ஜிடி4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ள அஜித் துபாயில் பயிற்சி செய்துவந்த விடியோ சமீபத்தில் வெளியானது.

கடந்த ஜூலை மாதம் தான் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றினை வாங்கிய அஜித் சமீபத்தில் போர்ஷே ஜிடி3 வகை கார் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பயணம்தான் கல்வியின் சிறந்த வடிவம்

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பயணம் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா எனத் தெரியவில்லை எனக் கூறிவந்த நிலையில் அஜித்தின் மேலாளர் இதைப் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில் அஜித் பேசியதாவது:

நீங்கள் பயணிக்கும்போது மேம்பட்ட மனிதராக மாறலாம். அதுதான் பயணத்தின் கருத்து. பயணம்தான் கல்வியின் சிறந்த வழி என நினைக்கிறேன். ஒரு பழமொழி இருக்கிறது. அதில் நீங்கள் முன்பு பார்க்காத ஆள்களையும் உங்களது மதம் வெறுக்க வைக்கும். அது மதம், ஜாதி எதுவாக இருந்தாலும் அந்த பழமொழியில் வருவது உண்மை.

நாம் மக்களை பார்க்காமலேயேக் கூட அவர்களை மதிப்பிட கூடும். ஆனால், நீங்கள் பயணிக்கும்போது பலதை அனுபவிக்கலாம். நான் பயணித்தின்போது, பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்திருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களைப் புரிந்துகொள்ள முடியும். பயணத்தினால், உங்களைச் சுற்றியுள்ள மக்களை புரிந்துகொள்ள தொடங்குவீரகள். அது உங்களை மேம்பட்ட மனிதராக்கும் என்றார்.

#AjithKumar❣️@VenusMotoTourspic.twitter.com/Rr7iZaGwIg

— (@beingamar19) October 5, 2024

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!