பயணிகள் ரயிலில் தீ… திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் தீப்பிடித்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் திருவெறும்பூர் ரயில் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில்(0688) சனிக்கிழமை காலை 8.25 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பயணிகள் ரயில் 9 மணியளவில் திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்தபோது திடீரென ரயிலின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் அதிகமான நிலையில், பயணிகள் பெட்டிக்கு ஓடிவந்த ஓட்டுநர், ரயிலில் இருந்து பயணிகளை விரைந்து வெளியேறுமாறு சப்தம் செய்தார். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விரைந்து வெளியேறினர்.

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

பின்னர் அந்த வழியாக வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணிகள் ரயிலின் இன்ஜின் பெட்டியில் தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்றபோது தீ விபத்து நிகழ்ந்ததால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா