பயிற்சியாளர் பாணியில் ராகுல் டிராவிட்டை பின்பற்ற விரும்புகிறேன் – ஸ்ரீஜேஷ்

பயிற்சியாளர் பாணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பின்பற்ற விரும்புகிறேன் என ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.இந்தியா வெண்கலப்பதக்கம் வெல்ல இந்திய அணியின் ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே ஸ்ரீஜேஷ் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பயிற்சியாளர் பாணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பின்பற்ற விரும்புகிறேன் என ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பயிற்சியாளர் பாணியில் நான் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பின்பற்ற விரும்புகிறேன். அவர் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்த போது திறமையான நிறைய இளம் வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளித்து சீனியர் அணிக்கு கொண்டு வந்தார். அதே போல் நானும் உருவாக்க விரும்புகிறேன். எல்லாம் சரியாக நகர்ந்தால் 2029-ம் ஆண்டுக்குள் 20 அல்லது 40 வீரர்களை உருவாக்கி விடுவேன். 2030-ம் ஆண்டுக்குள் அவர்களில் 15-20 வீரர்கள் சீனியர் அணியில் இருப்பார்கள்.என தெரிவித்தார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா