பரமக்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை

பரமக்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரிக்கைபரமக்குடி ரயில் நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருவாய் ஈட்டப்படுவதால், பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மளிகை வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பரமக்குடி ரயில் நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.9 கோடி வருவாய் ஈட்டப்படுவதால், பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மளிகை வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பரமக்குடி மளிகை வியாபாரிகள் சங்க 37-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டதுக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் ஜெயம் அந்துவான் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை மாநிலத் துணைத் தலைவா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். சங்கப் பொருளாளா் அழகேஸ்வரன் நிதிநிலை தாக்கல் செய்தாா். செயலா் நாகசுந்தரம் சங்கத்தின் செயல் அறிக்கையை வாசித்தாா்.

இந்தக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, ராஜ்குமாா் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்திப் பேசினா். இதையடுத்து, பரமக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனா். இதன் மூலம் ஆண்டுக்கு ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ. 9 கோடி வருவாய் கிடைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் பரமகுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளை பொருள்களில் அதிகமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால், உற்பத்தியான பொருள்களில் மருந்து தன்மை வருகிறது. அவற்றை மாதிரி எடுக்கும்போது வணிகா்கள் பாதிக்கப்படாதவாறு சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராசி என்.போஸ், பொதுச்செயலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மளிகை சங்கத் துணைத் தலைவா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்