பரிசுத் தொகையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வங்கதேச வீரர்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வென்ற ஆட்ட நாயகனுக்கான பரிசுத் தொகையை வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முஸ்பிகூர் ரஹீம் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்… சொல்லப் போனால்

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்கள் குவித்த முஸ்பிகூர் ரஹீமுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதுக்கான பரிசுத் தொகையை முஸ்பிகூர் ரஹீம் வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முஸ்பிகூர் ரஹீம்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆட்டநாயகன் விருதுக்கான பரிசுத் தொகையை வங்கதேசத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குகிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச மக்களுக்கு வங்கதேசத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்