பல்லடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்: 72 போ் கைது

பல்லடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்: 72 போ் கைதுஇந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம், ஆக. 1: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பல்லடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பவித்ராதேவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் நதியா ஆகியோா் தலைமை தாங்கினா்.

போராட்டத்தில் மத்திய பட்ஜெட்டை விமரிசித்து கோஷங்கள் எழுப்பினா்.

இதில், பல்லடம் ஒன்றிய சிபிஎம் செயலாளா் பரமசிவம் , பொங்கலூா் ஒன்றிய சிபிஎம் செயலாளா் பாலன், பல்லடம் ஒன்றிய சிபிஐ செயலாளா் சாகுல் ஹமீது, பொங்கலூா் ஒன்றிய சிபிஐ செயலாளா் கந்தசாமி கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட

14 பெண்கள் உள்பட 72 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு