பள்ளியை பூட்டிய தலைமை ஆசிரியர்! வெய்யிலில் மாணவர்கள் அவதி!

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர் பள்ளியை பூட்டியதால், மாணவர்கள் அவுதியுற்றுள்ளனர்.

இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு, மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதிபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோஜாக்) இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி!

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளியை பூட்டிவிட்டதால், பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளி வெளியே அமர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும், மாணவர்கள் வெய்யிலில் தரையில் அமர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்த நிலையில், தலைமையாசிரியர் அவர்களை தடுத்து நிறுத்தி பள்ளி வளாகத்திற்குள் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்ததாக பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!