பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (அக். 30) பிற்பகல் அரை நாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுநாள் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பா் 1-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைகள் என்பதால், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 4 நாள்கள் தீபாவளி விடுமுறை கிடைத்துள்ளது.