பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்த மனைவி உடலை வாங்க ஐ.ஏ.எஸ். அதிகாரி மறுப்பு

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் மின் வாரிய ஒழுங்குமுறை ஆணைய செயலாளராக பணியாற்றி வருபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரஞ்சித் குமார். இவரது மனைவி தூத்துக்குடியை சேர்ந்த சூர்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். கருத்து வேறு பாட்டால் சூர்யா கணவரை பிரிந்தார்.

விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரது 14 வயது மாணவரை ரூ.2 கோடி கேட்டு கடத்திய வழக்கில் முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார், அவருடைய கூட்டாளிகளான தென்காசியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஐகோர்ட்டு மகாராஜா, ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவே அவர்களையும் போலீசார் தேட தொடங்கினார்கள்.

இந்த நிலையில் குஜராத் சென்ற சூர்யா கணவருடன் சேர முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வேறு இடத்தில் தங்கியிருந்து உள்ளார். அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் தனக்கும் குழந்தை கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மகாராஜாவுடன் பழகிய பாவத்துக்காக எல்லாவற்றிலும் என் பெயரை இழுத்தார்கள்.

மகாராஜாவுடன் பழகிய பாவத்தால் குடும்ப மரியாதை போனது. கணவரும் பிரிந்தார். என்றாவது ஒருநாள் நான் நிரபராதி என அறிவிக்கப்படுவேன் என்று உருக்கமாக கூறியிருந்தார். இந்த நிலையில் குஜராத்தில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சூர்யா உடலை அவரது கணவர் ரஞ்சித்குமாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர் உடலை வாங்க மறுத்து விட்டார்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி