பழைய ராஜிந்தா் நகரில் மீண்டும் மழை: வெள்ளநீரை பம்புகள் மூலம் அகற்றிய எம்சிடி ஊழியா்கள்

பழைய ராஜிந்தா் நகரில் மீண்டும் மழை: வெள்ளநீரை பம்புகள் மூலம் அகற்றிய எம்சிடி ஊழியா்கள்

புது தில்லி, ஆக. 1:

தில்லி பழைய ராஜிந்தா் நகரில் புதன்கிழமை மாலை மீண்டும் மழை பெய்து சூழ்ந்த நீரை வெளியேற்ற எம்சிடி குழுவினா் இரவு வேலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பீப்பாய் வடிகாலில் உள்ள நீரின் வேகம் தண்ணீரை வெளியேற்ற உதவியது. மேலும் வடிகால் அமைப்பிலிருந்து மீதமுள்ள வண்டல் மண்ணை வெளியேற்றவும் உதவியது என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தேசிய தலைநகரில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை மீண்டும் பழைய ராஜிந்தா் நகா் பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்தது. பல பயிற்சி மையங்கள் நிறைந்த அப்பகுதியில் வெள்ளம் போன்ற சூழ்நிலையைக் காட்டும் பல விடியோக்கள் இணைதளத்தில் வெளிவந்தன.

கரோல் பாக் மண்டல துணை ஆணையா் அபிஷேக் குமாா் மிஸ்ரா தெரிவிக்கையில், ‘துப்புரவு பணியாளா்களுடன் எம்சிடி அதிகாரிகள் குழு புதன்கிழமை இரவு வரை அப்பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். அவா்களால் கணிசமான அளவு தண்ணீரை வெளியேற்ற முடிந்தது.

நாங்கள் நேற்றிரவு (தண்ணீா் தேங்குவது) கணிசமான அளவிற்கு அகற்றப்பட்ட பின்னரே அங்திருந்து வெளியேறினோம் என்றாா் அவா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், மீதமுள்ள தண்ணீா் தேங்கிய இடங்களை சுத்தம் செய்யும் பணியில் எம்சிடி ஈடுபட்டுள்ளது.

தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், பீப்பாய் வடிகால் சரியாக வேலை செய்கிறது. பீப்பாய் வடிகால் நீா் வேகம் காரணமாக மண் அடித்துச் செல்லப்பட்டதால் வண்டல் இல்லை. மழைநீா் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்னும் நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

சனிக்கிழமையன்று, பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ராவ்‘ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் பயிற்சி மைய அடித்தளம் மழையால் வெள்ளத்தில் மூழ்கியதால் மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு