பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,793 கோடி!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் 2024 காலாண்டு நிகர லாபம் ரூ.3,793.02 கோடியாக உள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,781.42 கோடியாக இருந்தது என்று நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.11,530.43 கோடியிலிருந்து ரூ.11,845.93 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: மேக்ஸ் ஹெல்த்கேர் 2வது காலாண்டு லாபம் 2% உயர்வு!

2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் இடைக்கால ஈவுத்தொகையாக தலா ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு ரூ.4.50 வழங்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி ஒருங்கிணைந்த அடிப்படையில் அதன் மொத்த நிலையான சொத்துக்கள் ரூ.2,78,983 கோடியாக உள்ளது.

கட்டண அடிப்படையிலான போட்டி ஏலத்தின் கீழ், பவர்கிரிட் கார்ப்பரேஷன் ரூ.38,575 கோடி மதிப்பிடப்பட்ட செலவில் எட்டு திட்டங்களுக்கு வெற்றிகரமான ஏலதாரராக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

நியூசி. ஒருநாள், டி20 தொடர்: இலங்கைக்கு புதிய கேப்டன்!

டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த வங்கதேச முன்னாள் பிரதமர்!