மாலையில் சுவாமியும், அம்மாவாளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது.
இதையொட்டி பவித்ர மாலைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த மாலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவர், உற்சவர், விமான பிரகாரம், கொடி மரம் மற்றும் பலிபீடத்துக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதுதவிர உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னாபன திருமஞ்சனமும் செய்யப்பட்டது.
மாலையில் சுவாமியும், அம்மாவாளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள் வரலட்சுமி, கோபிநாத், ரமேஷ், கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.