பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ராணுவ படைத்தள வளாகத்தின் மீது மோதினர். இதனால் அந்த வளாகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதே சமயம் தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்ததால் பெரும் பேரழிவு தடுக்கப்பட்டதோடு, விலைமதிப்பற்ற அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் அனைத்து பயங்கரவாதிகளும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர செயலை ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஹபீஸ் குல் பகதூர் அமைப்பு நிகழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்