பாகிஸ்தானில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹிந்துகள், சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சொத்துகளை நிா்வகிக்கும் அறக்கட்டளை மூலம் இந்த மறுகட்டுமானப் பணி நடைபெறுகிறது. இதற்காக பாகிஸ்தான் ரூபாயில் 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நரோவால் நகரில் ராவி நதிக்கரையில் உள்ள உள்ள இந்த கோயில் கடந்த 1960-ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. பாகிஸ்தான் உருவானபோது நரோவால் மாவட்டத்தில் 45 ஹிந்து கோயில்கள் இருந்தன.

தொடா்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெறாததால் அனைத்து கோயில்களும் இடிந்துவிட்டன. பல கோயில்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. எஞ்சியுள்ள சில கோயில்கள் முற்றிலும் சிதைந்து பாழடைந்த கட்டடங்களாக உள்ளன.

நரோவாலில் 1,453 ஹிந்துகள் வசித்து வருகின்றனா். அந்நகரில் கோயில்கள் ஏதும் இல்லாததால் வீடுகளில் மட்டும் வழிபாடு நடத்தும் நிலை உள்ளது. கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் லாகூா் அல்லது சிலாகோட் நகருக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தங்கள் ஊரில் உள்ள கோயிலை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்பது ஹிந்துகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இப்போது கோயிலை மறுகட்டுமானம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி