பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றி; மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வங்கதேச கேப்டன்!

பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக வெற்றி பெற்றது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேசியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்… சொல்லப் போனால்

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது மிகவும் சிறப்பான தருணம் என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.

We dedicate today's victory to those who lost their lives in the anti-discrimination student movement | Nazmul Hossain Shanto,
Captain, Bangladesh team | #BCB#Cricket#Bangladesh#PAKvBAN#WTC25pic.twitter.com/d9P3ZZGXtL

— Bangladesh Cricket (@BCBtigers) August 25, 2024

Bangladesh team captain Najmul Hossain Shanto reflects on the victory after winning the Test match against Pakistan | #BCB#Cricket#BDCricket#Bangladesh#PAKvBAN#WTC25pic.twitter.com/ZpnCyBtMYw

— Bangladesh Cricket (@BCBtigers) August 25, 2024

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த மாதம் வங்கதேசத்தில் நாங்கள் மிகவும் கடிமான சூழலை எதிர்கொண்டோம். அதன்பின், எங்களுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. வங்கதேசத்தில் இன்னும் பிரச்னை நீடித்து வருகிறது. ஆனால், வங்கதேச மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள். இந்த வெற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். முதல் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று வங்கதேச மக்களுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்க விரும்புகிறோம் என்றார்.

பல நினைவுகளை கொடுத்துள்ளீர்கள்; ஷிகர் தவானுக்கு விராட் கோலி வாழ்த்து!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!