பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; காயம் காரணமாக விலகிய வங்காளதேச முன்னணி வீரர்?

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி ராவல்பிண்டியிலும், 2வது போட்டி வரும் 30ம் தேதி கராச்சியிலும் தொடங்க உள்ளது.

இதையடுத்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணியில் இடம்பிடித்திருந்த முன்னணி வீரரான மஹ்முதுல் ஹசன் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்காளதேச அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மஹ்முதுல் ஹசன் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். காயம் அடைந்த மஹ்முதுல் ஹசனுக்கு பதிலாக மாற்று வீரரை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா