பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து!

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

பிரைடான் கார்ஸ் மற்றும் ஜோர்டான் காக்ஸ் அறிமுக வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர்களான ரிஹான் அகமது மற்றும் ஜாக் லீச் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரிஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிராலி, பென் டக்கெட், ஜோஸ் ஹல், ஜாக் லீச், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

Our 17-strong squad to take on Pakistan!
#PAKvENG | #EnglandCricket

— England Cricket (@englandcricket) September 10, 2024

பாகிஸ்தான் – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விவரம்

முதல் டெஸ்ட் – முல்தான் (அக்டோபர் 7 – அக்டோபர் 11)

2-வது டெஸ்ட் – கராச்சி (அக்டோபர் 15 – அக்டோபர் 19)

3-வது டெஸ்ட் – ராவல்பிண்டி (அக்டோபர் 24 – அக்டோபர் 28)

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!