பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா..! பிசிசிஐ புகழாரம்!

பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?

இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் எடுக்க வேகமாக ஓடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த வாரத்தில் பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் ஸ்கேன் செய்யப்பட உள்ளது.

ஆஸி.யின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆடம் ஸாம்பா..! மிட்செல் மார்ஷ் புகழாரம்!

ஆலி போப் கேப்டன்

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். இதனையடுத்து, ஆலி போப் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்பாக பென் ஸ்டோக்ஸ் முழுமையாக காயத்திலிருந்து குணமடையாத பட்சத்தில், அணியை மீண்டும் ஆலி போப் கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!