பாகிஸ்தான் – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; போட்டி அட்டவணையில் மாற்றம் – காரணம் என்ன..?

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

லாகூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முல்தானிலும், 2வது போட்டி கராச்சியிலும், 3வது போட்டி ராவல்பிண்டியிலும் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், இந்த தொடரின் 2வது போட்டி கராச்சியில் இருந்து முல்தானுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக கராச்சி மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போட்டி கராச்சியிலிருந்து, முல்தானுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு போட்டிகள் ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி (முல்தான், ராவல்பிண்டி) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி வேறொரு மைதானத்திற்கு மாற்றப்படுவது இது முதல் முறை அல்ல.

ஏற்கனவே வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கராச்சி மைதானத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக கூறி அந்த தொடரின் 2வது போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் அட்டவணை விவரம்;

முதல் டெஸ்ட் போட்டி – அக்டோபர் 7-11 – முல்தான்

2வது டெஸ்ட் போட்டி – அக்டோபர் 15-19 – முல்தான்

3வது டெஸ்ட் போட்டி – அக்டோபர் 24-28 – ராவல்பிண்டி.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்