பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை.. அனல் பறந்த நாடாளுமன்றம்

பாஜகவினர் இந்துக்கள் இல்லை.. ராகுலுடன் பிரதமர் மோடி, அமித் ஷா கடும் விவாதம்.. அனல் பறந்த நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “அரசியலமைப்பை காக்க முயற்சிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் சில தலைவர்கள் சிறையில் உள்ளனர். பிரதமரின் உத்தரவாலும், இந்திய அரசின் உத்தரவாலும், நான் தாக்கப்பட்டேன். அதிலும் மிகுந்த மகிழ்ச்சியான பகுதி என்னவென்றால், நான் அமலாக்கத்துறையால் 55 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

விளம்பரம்

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். எங்களுக்கு அதிகாரத்தை விட மேலான ஒன்று உள்ளது. அதுதான் உண்மை. மகாத்மா காந்தி குறித்து ஒரு படத்தின் மூலம்தான் அனைவருக்கும் தெரியவந்ததாக பிரதமர் தெரிவித்தார். அவரின் அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் கவனித்த மற்றொரு விஷயம், தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன.

நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். அவற்றை இந்து மதம் பரப்பாது. நீங்கள் உண்மையான இந்துக்கள் இல்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

விளம்பரம்

Also Read :கேஸ் விலை குறைப்பு முதல் புதிய மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வரை… இம்மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறைகள் !

அப்போது அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறுக்கிட்டு, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் தீவிரமான விஷயம் என்று கண்டனம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பிரதமர் மோடியைத் தான் குறிப்பிடுவதாகவும், இவர்கள் ஒட்டுமொத்த இந்து சமுதாயம் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார்.

விளம்பரம்

இதையடுத்து, இருதரப்பு எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பியதால், அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களை இந்து என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் அனைவரும் வன்முறையைப் பற்றி பேசுகிறார்கள் என்று ராகுல் காந்தி சொல்ல முயற்சிக்கிறார் என்றும் சாடினார். மேலும், “வன்முறையை எந்த மதத்துடன் தொடர்பு படுத்த முடியாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கோருகிறேன். நாட்டில் காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை பரப்பியபோது, அகிம்சையை பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை” என்று அமித் ஷா பேசினார்.

விளம்பரம்

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை இந்து என சொல்லிக் கொள்ளும் ராகுல் காந்தி, இந்துக்கள் அனைவரையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது, காங்கிரஸ் கட்சிக்கு இந்துக்கள் மீதான வெறுப்பையும், அவமதிப்பையும் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament
,
Parliament Session
,
PM Modi
,
Rahul Gandhi

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து