பாஜகவினர் போலி இந்துக்கள்.. ராகுல்காந்தி பேச்சால் கடும் அமளி!

பாஜகவினர் போலி இந்துக்கள்… ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் கடும் அமளி!

ராகுல் காந்தி

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், போலி இந்துக்கள் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அமளி ஏற்பட்டது.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். பாஜக அரசின் வரி தீவிரவாதத்தால் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய ராகுல், சிறு,குறு தொழில் செய்வோருக்கு நள்ளிரவில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி துறையில் இருந்து அழைப்பு வருவதாகக் கூறினார்.

மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல தற்போது இந்திய மக்களின் நிலை உள்ளது என்றும், சக்கர வியூகத்திற்குள் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் இருந்தது போல் இங்கு, மோடி, அமித் ஷா உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விளம்பரம்

பாஜக அமைத்துள்ள அச்சமெனும் சக்கர வியூகத்தை “இந்தியா” கூட்டணி தகர்தெறியும் என்றும் ராகுல் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, 10 ஆண்டுகளில் 70 முறை போட்டித் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளதாகவும், அது பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை என்றும் கூறினார்.

நீண்ட கால முதலீட்டு லாபங்களுக்கான வரியை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களின் நெஞ்சில் குத்தும் செயல் என்றும், சொத்துகளை விற்கும் போது கூடுதல் வரி விதிப்பது நடுத்தர மக்களின் முதுகில் குத்துவது போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Parliament
,
Parliament Session
,
Rahul Gandhi

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு