பாஜகவில் இணைகிறாரா சாம்பாய் சோரன்…? ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு

பாஜகவில் இணைகிறாரா சாம்பாய் சோரன்…? ஜார்க்கண்ட் மாநில அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு

ஜார்க்கண்டில் இடைக்கால முதலமைச்சராக இருந்த சாம்பாய் சோரன், தனது கட்சி மீது அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசியுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகி பாஜகவில் அவர் ஐக்கியமாகலாம் என வெளியாகியுள்ள தகவலால் அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது.

ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்துவிட்டது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் ஹேமந்த் சோரனே வந்துவிட்டார். இனி எல்லாப் பிரச்சினையுமே முடிந்துவிட்டது என்றுதான் நேற்று வரை பலரும் நினைத்தார்கள். ஆனால் இன்று நிலைமையே வேறு. மீண்டும் ஒரு பரபரப்புக்கும், அரசியல் அசாதாரண சூழலுக்கும் தற்போது தள்ளப்பட்டுள்ளது ஜார்க்கண்ட் மாநிலம். அதற்கு காரணமான ஒரு பெயர் சாம்பாய் சோரன்!

விளம்பரம்

ஜார்க்கண்டின் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதானார். இதனால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் முதலமைச்சராக்கப்பட்டார். பின்னர், சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ஹேமந்த் சோரன், 5 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சரானார். இந்த நிகழ்வுகள் நடந்து சில மாதங்கள் கடந்த நிலையில், தற்போது பொங்கி எழுந்துள்ளார் பதவியை இழந்த சாம்பாய் சோரன்.

விளம்பரம்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக தான் மிகவும் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக அடுக்கடுக்கான புகார்களை அள்ளிவீசியுள்ள சாம்பாய் சோரன், அதை சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவாக வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, ராஜினாமாவுக்கு முன்பாக, தான் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் தனக்கே தெரியாமல் கட்சித் தலைமையால் ஒத்திவைக்கப்பட்டது முதலமைச்சராக தனக்கு அவமானத்தை அளித்தது எனவும், தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இந்தச் சம்பவத்தால் தான் முதன்முறையாக உடைந்து போனதாகவும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:
மம்தா மீது குற்றம்சாட்டும் பெற்றோர்.. விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் – என்ன நடக்கிறது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில்?

விளம்பரம்

மாநில முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் இன்னொருவரால் ரத்து செய்யப்படுவதை விட ஜனநாயகத்தில் அவமானகரமானது வேறு எதுவும் இருக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது சுயமரியாதை பாதிக்கப்பட்டதால் இதயம் நொறுங்கிவிட்டதாகவும் சாம்பாய் சோரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன் முன்னால் தற்போது 3 விதமான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவது. மற்றொன்று தனிக்கட்சி தொடங்குவது. கடைசி வாய்ப்பு, தனக்கு ஏற்ற கருத்துடையவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் பயணிப்பது என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
வயநாடு நிலச்சரிவு கோரம் : அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

ஜார்க்கண்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சாம்பாய் சோரன் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள சாம்பாய் சோரனுடன் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், சொந்த வேலைகளுக்காக டெல்லி வந்ததாகவும், தற்போதும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில்தான் இருப்பதாகவும் கூறியுள்ளார் சாம்பாய் சோரன்.

விளம்பரம்
சதுரகிரி மலையேறத் தடை… இறுதி நேரத்தில் வனத்துறை வெளியிட்ட அறிவிப்பால் பக்தர்கள் அதிர்ச்சி.!
மேலும் செய்திகள்…

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், குறுக்கு வழியில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், தனக்கு 3 வாய்ப்புகள் இருப்பதாக சாம்பாய் சோரன் குறிப்பிட்டுள்ளது, ஜார்கண்ட் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
champai soren
,
Hemant Soren
,
jharkhand

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்