பாஜகவில் இணைந்தார் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி. சுஜீத் குமார்

பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய சுஜீத் குமார் இன்று பாஜகவில் இணைந்தார்.

தில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் பாஜகவில் தன்னை இணைந்துக்கொண்டார்.

பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சுஜீத் குமார், வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மும்பை: டைம்ஸ் டவரில் தீ விபத்து

மாநிலங்களவைத் தலைவருக்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், உணர்வுபூர்வமாக இந்த முடிவை எடுத்ததாக சுஜீத் குமார் குறிப்பிடுள்ளார்.

அவரது ராஜிநாமாவை குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே அவர் ராஜிநாமா செய்த உடனேயே, சுஜீத் குமாரை கட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் நீக்கியது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா மோகந்தா பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய ஒரு மாதத்திலேயே மற்றொரு எம்.பி.யான சுஜீத் குமாரும் கட்சியில் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி