பாஜகவை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் – எதற்காக தெரியுமா?

“திமிர் பிடித்தவர்களை 240 உடன் ராமர் நிறுத்துவிட்டார்” – பாஜகவை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

இந்திரேஷ் குமார்

திமிர் அதிகமாகி, ஆணவத்தில் ஆட்டம் போட்டவர்களை 240 எம்.பி.க்கள் உடன் ராமர் நிறுத்திவிட்டதாக, பாஜகவை ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தின்போது நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், பாஜக வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

விளம்பரம்

குறிப்பாக, கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்ததோடு, ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலும் பாஜக தோல்வியடைந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ என்ற நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவமும், திமிரும் அதிகரித்துவிட்டதாக, பாஜகவை கடுமையாக சாடினார். இதன் காரணமாகவே, அவர்களை 240 இடங்களை கொடுத்து, அவர்களது ஆணவத்தை கடவுள் ராமர் நிறுத்தியிருப்பதாகவும், மேலும், ராமர் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்காக, அவர்களை பெரிய கட்சியாக உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்இதையும் படிங்க : இன்று திமுக முப்பெரும் விழா… கோவையில் நடத்தப்படுவது ஏன்?அரசியல் பின்னணி இதுதான்.!

”ராமரை நம்ப மறுத்தவர்களையும் 234 இடங்களை கொடுத்து தோற்கடித்து இருக்கிறார். ராமருக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு, அவர் ஆட்சியை கொடுக்கவில்லை” என்றும் இந்திரேஷ் குமார் விமர்சித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரின் கருத்து, பாஜகவுக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையே நிலவும் மோதல் போக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாகவும், அரசியல் நோக்கர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Lok Sabha Election Results 2024
,
RSS

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?