பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நிதி ஆயோக் கூட்டத்தை தொடர்ந்து பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நிதி ஆயோக் கூட்டத்தை தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதற்காக அலுவலகம் வந்த பிரதமர் மோடியை பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மத்திய – மாநில அரசுகளின் திட்டங்களை எவ்வாறு அடிமட்டம் வரை கொண்டுசேர்ப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களுக்கான வியூகம் அமைப்பது குறித்தும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
புதுச்சேரி, தெலுங்கானா உள்பட 12 இடங்களில் ஆளுநர்கள் மாற்றம் – மகாராஷ்ட்ரா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இவை தவிர பாஜகவின் கட்டமைப்பு வளர்ச்சி குறித்தும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Central govt
,
PM Modi
,
pm modi advice

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து