பாஜக தோல்வி: தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதி!

பாஜக தோல்வி: தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதி!7 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதிஎம்.பி. சு.வெங்கடேசன்கோப்புப் படம்

7 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு தீமைகள் வீழ்த்தப்படுவதே ராமகதையின் நியதி என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

7 மாநிலங்களிலுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூலை 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், இந்தியா கூட்டணி 10 இடங்களிலும் (காங்கிரஸ் -4, திரிணமூல் காங்கிரஸ் -4, திமுக -1, ஆம் ஆத்மி -1) பாஜக 2 இடங்களிலும், சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றனர்.

இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 11 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

அயோத்தி, பிரயாக் ராஜ், ராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து நேற்று தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக.

ஶ்ரீ ராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி.

தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகதையின் நியதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி