பாதியாகக் குறைந்த காய்கறி விலை

சென்னையில் மழை தொடங்கியவுடன் கடுமையாக உயா்ந்த காய்கறிகளின் விலை புதன்கிழமை பாதியாகக் குறைந்தது.

தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக பால், பிரட், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தேவையான அளவு வாங்கி சேமித்து வைத்தனா்.

இதன்காரணமாக திங்கள்கிழமை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயா்ந்தது. குறிப்பாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை காய்கறிகள் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.150-வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை மழையின் தாக்கம் குறைந்ததையடுத்து ஒரே நாளில் காய்கறிகளின் விலை பாதியாகக் குறைந்தது.

இதன்படி, கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் புதன்கிழமை ரூ.160-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.90-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.80-க்கும், ரூ.70-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.50-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட காராமணி ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.40-க்கும், ரூ.50-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.30-க்கும், ரூ.90-க்கு விற்கப்பட்ட பச்சைமிளகாய் ரூ.60-க்கும் குறைந்து விற்பனையானது.

Related posts

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

1.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் கூடுதல் விற்பனை

சென்னை: ஒரே நாளில் பிடிபட்ட 43 பாம்புகள்