‘பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாது’ – நடிகை சபானா ஆஸ்மி

பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என நடிகை சபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல நடிகையும், இமாச்சல பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகார் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர், கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விவசாய போராட்டம் குறித்து தவறாக பேசியதால் கங்கனாவை தாக்கியதாக குல்வீந்தர் கவுர் கூறினார். இதனிடையே குல்வீந்தர் கவுர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கங்கனா ரனாவத்திற்கு ஆதரவாக மூத்த பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கங்கனா ரனாவத் மீது உள்ள அன்பு குறையவில்லை. அவரை அறைந்த விவகாரத்தை கொண்டாடி வருபவர்களுடன் நான் சேர விரும்பவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கங்கனா ரனாவத், நடிகை சபானா ஆஸ்மியின் கணவரும், மூத்த திரைக்கதை எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தன்னை மிரட்டினார் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு எதிராக ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!