‘பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது’ – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பிரதமர் மோடியின் தலைமையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய இலக்குகளை அடைந்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023-24ல் இந்தியாவின் உற்பத்தி மதிப்பு ரூ.1,26,887 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பை விட 16.8% அதிகமாகும்.

பாதுகாப்பு பொருட்களைத் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை நிறுவனங்களை வாழ்த்துகிறேன். உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது."

இவ்வாறு ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

The Make in India programme is crossing new milestones, year after year, under the leadership of PM Shri @narendramodi.
India has registered the highest ever growth in the value of defence production in 2023-24. The value of production has reached to Rs. 1,26,887 crore in…

— Rajnath Singh (@rajnathsingh) July 5, 2024

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து