பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் – 15 நக்சலைட்டுகள் அதிரடி கைது

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் தான்டேவாடா மாவட்டம் குமல்னர் கிராமத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சிறப்பு துணை ராணுவ படையினருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. சுதாரித்து கொண்ட பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகள் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அங்கு மறைந்து இருந்து நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நக்சலைட்டுகள் தங்களுடைய தாக்குதல் தோல்வியில் முடிந்ததையடுத்து நாலாபுறமும் சிதறி ஓட தொடங்கினர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து 7 பெண்கள் உள்பட 15 நக்சலைட்டுகளை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிமருந்து அடங்கிய பைகள், டிபன்பாக்ஸ் குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்