பாந்த்ரா-ஓர்லி கடல்பாலத்தில் பயங்கர விபத்தில் முடிந்த கார் பந்தயம்

மும்பையின் பாந்த்ரா – ஓர்லி கடல் பாலத்தில் மெர்சிடிஸ் – பிஎம்டபிள்யு கார்களுக்குள் நடந்த பந்தயம் பயங்கர விபத்தில் முடிந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஓட்டுநர்கள் கைதாகியுள்ளார்.

பாந்த்ரா – ஓர்லி கடல் பாலத்தின் மீது, ஞாயிறன்று மூன்று கார்கள் ஒன்றோடென்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் யாருக்கும் பெரிய காயங்கள் இல்லாத நிலையில், கார் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால், அப்பகுதியில் 30 நிமிடத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிஎம்டபிள்யு காரும், மெர்சிடிஸ் காரும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்று, அவர்களுக்குள் கார் பந்தயமே ஏற்பட்ட நிலையில், மெர்சிடிஸ் கார், டிஎம்டபிள்யூ மீது மோத, அது ஒரு வாடகைக் கார் மீது மோதியது. வாடகைக் காரில் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மலப்புரத்தில் நிபா வைரஸுக்கு 2வது நபர் பலி: தடை உத்தரவு, திரையரங்குகள் மூடல்!

இரண்டு சொகுசு கார்களுக்கும் இடையே நடந்த பந்தயத்தில், 4வது வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த வாடகைக் கார் மூன்று முறை குட்டிக்கரணம் அடித்து முதல் வழித்தடத்தில் வந்து நின்றது.

இதையடுத்து, இரண்டு சொகுசு சார்களின் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தினால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்தையும் சரி செய்து போக்குவரத்துக் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்