பாபர் அசாமின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

பாபர் அசாமின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.ரோஹித் சர்மாபடம் | AP

சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டபோதிலும், சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டனாக வலம் வந்த பாபர் அசாமின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். அணியின் கேப்டனாக இருவரும் தங்களது அணிகளை 48 போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த கேப்டன்கள் (சூப்பர் ஓவர் வெற்றிகளையும் சேர்த்து)

ரோஹித் சர்மா – 48 வெற்றிகள் (60 போட்டிகளில்)

பாபர் அசாம் – 48 வெற்றிகள் (85 போட்டிகளில்)

பிரையன் மசாபா – 45 வெற்றிகள் (60 போட்டிகளில்)

இயான் மோர்கன் – 44 வெற்றிகள் (72 போட்டிகளில்)

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு