பாம்பு பிடிப்பவரை கடித்து மரணமடைந்த ராஜநாகம்!

பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம் – வினோதம் நடந்தது எப்படி?

இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு சில பாம்பு பிடி வீரர்களும் அடக்கம். பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியில் இருக்கும் சிலர், ஒரு சில நேரங்களில் செய்யும் சிறிய தவறுகளால் பாம்பு கடித்து மரணமடைகின்றனர். இந்நிலையில், அண்மையில் மத்திய பிரதேசத்தில் பாம்பு பிடிப்பவரை கடித்து ராஜநாகம் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் அருகே நரியவல்லி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சாகர் -குரை சாலையில் உள்ள தடுப்புச் சுவர் அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜநாகம் ஒன்று இருப்பதாக, பாம்பு பிடி வீரர் சந்திரகுமார் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அவர் 5 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தார். பிடித்தபோது துள்ளிய ராஜநாகம் திடீரென அவரது பிடியில் இருந்து விலகி, அவரை இரண்டு கட்டை விரல்களையும் கடித்தது.

விளம்பரம்

இருப்பினும், அவர் பை ஒன்றில் ராஜநாகத்தை அடைத்துவிட்டார். இதனிடையே, அவரை பாம்பு கடித்துவிட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுவாக ராஜநாகம் கடித்தால் ஒரு சில நிமிடங்களில் மரணம் ஏற்பட்டு விடும் என்றாலும், மன தைரியத்துடன் இருந்தால் மேலும் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம். அதற்குள் சரியான விஷ முறிவு மருந்தை கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம். அதனடிப்படையில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியில் இருக்கும் சந்திரகுமார் மன தைரியத்துடன் இருந்ததால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க:
37,510 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள் – நாசா எச்சரிக்கை!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சந்திரகுமார் தன்னை பாம்பு கடித்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, அவரை கடித்த ராஜநாகம் அதே இடத்தில் இறந்து கிடந்தது. ஏனெனில், பாம்பை பிடித்த சந்திரகுமார் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டார். அவரை சுற்றியிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ராஜநாகம் அருகே நெருங்க யாரும் நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிளாஸ்டிக் பையில் இருந்து ராஜநாகமும் வெளியேறத் தெரியாமல் அதிலேயே இறந்துவிட்டது.

விளம்பரம்

2 வாரத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது பலருக்கும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையினரும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
bite
,
king cobra
,
snake
,
Trending News
,
Viral News

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்