பாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா

பாராஒலிம்பிக்ஸ் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

கடைசி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை. இப்போட்டியுடன் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்தன.

பதக்க பட்டியலில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்துள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா