பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி! வரலாற்றுச் சாதனை!

பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜோடி கிரின்ஹாம், பாராலிம்பிக் போட்டியில் இன்று (செப். 1) வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பாராலிம்பிக் தொடரில் படைத்துள்ளார்.

7 மாத கர்ப்பிணியான அவர், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

பிரிட்டனைச் சேர்ந்த வில் வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம். 31 வயதாகும் 7 மாத கர்ப்பிணியான இவர், பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் பிரிட்டன் சார்பில் பங்கேற்றார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதே நாட்டைச் சேர்ந்த போயிபி பீட்டர்சனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பங்கேற்று பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பெற்றுள்ளார்.

பதக்கம் வென்றது குறித்து பேசிய ஜோடி கிரின்ஹாம், தன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஜூலை மாதம் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில், எகிப்திய வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!