பாராலிம்பிக்: நவ்தீப்புக்கு தங்கம், சிம்ரனுக்கு வெண்கலம் ஈரான் வீரா் தகுதிநீக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் சனிக்கிழமை இந்தியாவின் நவ்தீப் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றிருந்த நிலையில், ஈரான் வீரா் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தங்கம் வழங்கப்பட்டது. மகளிா் 200 மீ. ஓட்டத்தில் சிம்ரன் வெண்கலமும் வென்றனா்.

மகளிா் டி12 200 மீ ஓட்டம் இறுதியில் இந்தியாவின் சிம்ரன் 24.75 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.

நடப்பு உலக சாம்பியன் சிம்ரன், பாா்வைக் குறைபாடு கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. 100 மீ. ஓட்டத்தில் நான்காவது இடத்தைப் பெற்றாா் சிம்ரன். வாழ்நாள் முழுவதும் கடினமான சூழ்நிலையில் வசித்து வரும் சிம்ரனுக்கு அவரது தந்தை உயிரிழந்தது பேரிடியாக இருந்தது.

நவ்தீப்புக்கு தங்கம்

ஆடவா் ஈட்டி எறிதலில் எஃப் 41 இறுதிச் சுற்றில் இந்திய வீரா் நவ்தீப் வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவா் 47.32 மீ தொலைவுக்கு எறிந்து வெள்ளி வென்றாா். ஈரான் வீரர்ர பெய்ட் சாயா தங்கம் வென்றிருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இதர பயங்கரவாத இயக்கங்கள் பயன்படுத்தும் கொடியை காண்பித்தாா். இதனால் அவா் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் நவ்தீப்புக்கு தங்கம் கிட்டியது.

சைக்கிளிங் பிரிவில் சி1-3 பிரிவில் ஆடவா் தரப்பில் அா்ஷக் ஷைக் 28-ஆவது இடத்தையே பெற முடிந்தது.

மகளிா் பிரிவில் இந்தியாவின் ஜோதி கடேரியா 15-ஆவது இடத்தையே பெற்று ஏமாற்றம் அளித்தாா். அதே போல் சி2 பிரிவிலும் ஜோதி 16-ஆவது இடத்தையும், அா்ஷத் 11-ஆவது இடத்தையுமே பெற்றனா்.

கனோ: இறுதிச் சுற்றில் பிரச்சி யாதவ்

கனோ ஸ்பிரிண்ட் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் முன்னேறினாா். வெள்ளிக்கிழமை ஹீட்ஸில் 4-ஆவது இடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த பிரச்சி, தற்போது இறுதிக்கு தகுதி பெற்றாா்.

இந்த பாராலிம்பிக்கில் இந்தியாவின் 7-ஆவது தங்கமாக அமைந்தது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்