பாரீஸ், பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 27 பதக்கங்கள் வென்றுள்ளது,
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த போட்டி தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-
பாரா சைக்கிள் ஓட்டுதல்:-
ஆண்கள் சி1-3 ரோட் ரேஸ் (இறுதிப் போட்டி – பதக்கச்சுற்று) – அர்ஷத் ஷேக் – மதியம் 1 மணி
பாரா சைக்கிள் ஓட்டுதல்:-
பெண்களுக்கான சி1-3 ரோட் ரேஸ் (இறுதிப் போட்டி – பதக்கச்சுற்று) – ஜோதி கதேரியா – மதியம் 1.05 மணி
பாரா கேனோ:-
ஆண்கள் கே.எல்.1 200மீ அரையிறுதி – யாஷ் குமார் – மதியம் 1.30 மணி
பாரா நீச்சல்:-
ஆண்கள் 50மீ பட்டர்பிளை எஸ்7 ஹீட்ஸ் – சுயாஷ் ஜாதவ் – மதியம் 1.55 மணி
பாரா கேனோ:-
மகளிர் வி.எல்.2 200மீ அரையிறுதி – பிராச்சி யாதவ் – மதியம் 1.58 மணி
பாரா கேனோ:-
ஆண்கள் கே.எல்1 200மீ (இறுதிப் போட்டி ஏ & பி – பதக்கச்சுற்று) (தகுதி பெற்றிருந்தால்) – யாஷ் குமார் – மதியம் 2.50 மணி
பாரா கேனோ:-
மகளிர் வி.எல்.2 200மீ (இறுதிப் போட்டி ஏ & பி – பதக்கச்சுற்று) (தகுதி பெற்றிருந்தால்) – பிராச்சி யாதவ் – மதியம் 3.14 மணி
பாரா நீச்சல்:-
ஆடவர் 50 மீ பட்டர்பிளை எஸ்7 (இறுதிப்போட்டி – பதக்கச்சுற்று) (தகுதி பெற்றிருந்தால்) – சுயாஷ் ஜாதவ் – இரவு 10.00 மணி
பாரா தடகளம்:-
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்.40, எப்.41 (இறுதிப் போட்டி – பதக்கச்சுற்று) – நவ்தீப் – இரவு 10.30 மணி
பாரா தடகளம்:-
பெண்களுக்கான 200மீ டி12 (இறுதிப் போட்டி – பதக்கச்சுற்று) – சிம்ரன் – இரவு 11.04 மணி
பாரா தடகளம்:-
ஆடவர் 400மீ டி47 (இறுதிப் போட்டி – பதக்கச்சுற்று) – திலீப் காவிட் – நள்ளிரவு 12.30 மணி (செப்டம்பர் 8)
Get ready for magic at the Day 1️⃣0️⃣ at the #ParisParalympics2024.
From #ParaCycling♂️ to #ParaCanoe, #ParaSwimming♀️ and #ParaAthletics♀️, our stars look to create history.
Keep chanting for #TeamIndia at the Paralympics2024.
Tune in to ⏩DD Sports & Jio Cinema! pic.twitter.com/BgrxKHqpz3— SAI Media (@Media_SAI) September 6, 2024