பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இல்லம்.. நீடா அம்பானிக்கு பாராட்டு

முதன்முறையாக ஒலிம்பிக்கில் அமைக்கப்படும் இந்தியா இல்லம்! நீடா அம்பானிக்கு குவியும் பாராட்டு

இந்தியா ஹவுஸ் – நீடா அம்பானி

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கென தனி இல்லம் (India House) அமைக்கப்படவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை அமைக்கிறது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

விளம்பரம்

ஒலிம்பிக் போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் தங்குவதற்காகவும், அந்த நாட்டை சேர்ந்த விஐபிக்கள் வருகை, கலாசாரத்தை பறைசாற்றும் கண்காட்சி, பார்வையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஒவ்வொரு நாடுகளும் இல்லம் ஒன்றை அமைக்கும். வீரர்களின் தற்காலிக ஓய்வு அறையாகவும் இது பயன்படுத்தப்படும். 2016 ஆம ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 35க்கும் அதிகமான இல்லங்கள் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதன்முறையாக இந்தியா தனது இல்லத்தை (இந்தியா ஹவுஸ்) பாரீஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கவுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்படுத்துகிறது. இந்தியா ஹவுஸின் முக்கியத்துவம் குறித்து இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா அம்பானி கூறியதாவது-

விளம்பரம்

“பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹவுஸை முதன்முதலில் அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ஐஓசி அமர்வு, நமது ஒலிம்பிக் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருந்தது. இந்தியா இல்லத்தை பாரிஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இதையும் படிங்க – பலத்த கரகோஷங்கள் மத்தியில் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி

இந்தியா இல்லத்தில் எங்கள் விளையாட்டு வீரர்களை நாங்கள் கௌரவிப்போம். எங்கள் வெற்றிகளைக் கொண்டாடுவோம். எங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்வோம். மேலும் உலக பார்வையாளர்களையும், வீரர்களையும் வரவேற்போம்.

விளம்பரம்

ஒலிம்பிக் இயக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான 140 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு இந்தியா ஹவுஸ் மேலும் ஒரு படியாக இருக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற வேண்டும். இந்திய வீரர்கள் நம் தேசிய கொடியை இந்த ஒலிம்பிக்கில் உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹவுஸ் முக்கிய இடமாக இருக்கும். இந்தியாவைப் பற்றியும் அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றியும் மற்ற நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் மக்களும் தெரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வழியாகும். இந்தியா ஹவுஸ் ஒரு விளையாட்டு நாடாகவும், ஒலிம்பிக் இயக்கத்திலும் நாம் செய்த முன்னேற்றங்களை பிரதிபலிக்கும். இந்த முயற்சியையும், இந்தியாவின் ஒலிம்பிக் இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றதற்காக ஐஓசி உறுப்பினர் நீடா அம்பானிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Olympic 2024
,
Reliance Foundation

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு