பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் – விவரம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் 6-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்:-

ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) – பகல் 12. 30 மணி.

பேட்மிண்டன்:-

பி.வி. சிந்து (இந்தியா )- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று) – பகல் 12.50 மணி.

லக்ஷயா சென் (இந்தியா) – ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா) – பிற்பகல் 1.40 மணி.

எச்.எஸ். பிரனாய் (இந்தியா) – டக் பாட் லீ (வியட்நாம்), (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று) – இரவு 11 மணி.

டேபிள் டென்னிஸ்:-

ஸ்ரீஜா அகுலா (இந்தியா) – ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று) – பிற்பகல் 2. 30 மணி.

குத்துச்சண்டை:-

லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) – சன்னிவா ஹாப்ஸ்டட் (நார்வே) (பெண்கள் 75 கிலோ தொடக்க சுற்று) – மாலை 3.50 மணி.

நிஷாந்த் தேவ் (இந்தியா) – ஜோஸ் கேப்ரியல் (ஈகுவடார்) (ஆண்கள் 71 கிலோ 2-வது சுற்று) – நள்ளிரவு 12.34 மணி.

வில்வித்தை:-

தீபிகா குமாரி (இந்தியா) – ரீனா பர்னாட் (எஸ்தோனியா) (பெண்கள் தனிநபர் பிரிவு) – மாலை 3.56 மணி.

தருண்தீப் ராய் (இந்தியா) – டாம் ஹால் (இங்கிலாந்து) (ஆண்கள் தனிநபர் பிரிவு) – இரவு 9.28 மணி.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி