பாரீஸ் ஒலிம்பிக்: டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

இந்திய வீரர் சுமித் நாகல், தனது முதல் சுற்றில் கோரென்டின் மவுடெட்வுடன் மோதுகிறார்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் யார்-யாருவது மோதுவது என்ற போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் (செர்பியா) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனை சந்திக்கிறார். சமீபத்தில் விம்பிள்டன் பட்டம் வென்ற கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஹேடி ஹபிப்புடனும் (லெபனான்), ரபெல் நடால் (ஸ்பெயின்), புசோவிக்சுடனும் (ஹங்கேரி) மோதுகின்றனர்.

உலக தரவரிசையில் 80-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், தனது முதல் சுற்றில் 68-ம் நிலை வீரரான கோரென்டின் மவுடெட்வுடன் (பிரான்ஸ்) மல்லுகட்டுகிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஸ்ரீராம் பாலாஜி இணை முதல் ஆட்டத்தில் பிரான்சின் பேபியன் ரிபோல்- ரோஜர் வாசெலின் இணையை எதிர்த்து ஆட உள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி