பாரீஸ் ஒலிம்பிக்; பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கா…இந்தியாவின் நிலை என்ன…?

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த தொடரில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.

கடந்த இரு வாரங்களாக விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா இன்று நள்ளிரவு (இந்திய நேரப்படி 12.30 மணிக்கு) நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதல் இடம் பிடித்துள்ளது. சீனா 2வது இடமும் (40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்), ஜப்பான் 3வது இடமும் (20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம்) பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா (1 வெள்ளி, 5 வெண்கலம்) 71வது இடமும், பாகிஸ்தான் (1 தங்கம்) 62வது இடமும் பிடித்துள்ளன.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா