பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் மல்யுத்தம் – பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்ஸானா லிவாச் உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் மோத உள்ளார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி