பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்றது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது.ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பாரீஸ் நகரில் உள்ள இன்வாலிடெகார்ட்னில் மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர்.

12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 4வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2046 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் , மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி