பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி

லக்சயா சென் 7-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதினார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை லக்சயா சென் இழந்தார்.

இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் லக்சயா சென் மோதினார்.

இதில் ஆட்டத்தின் முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய லக்சயா சென், 2வது செட்டை 16-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட லீ ஸி ஜியா 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் லீ ஸி ஜியா 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து