பாரீஸ் பாராலிம்பிக்: பதக்கம் வென்ற அவனி லெகரா, மோனா அகர்வால் பேசியது என்ன?

பாரீஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் அவர்களது வெற்றி குறித்து மனம் திறந்துள்ளனர்.

பாரீஸ் பாராலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் அவர்களது வெற்றி குறித்து மனம் திறந்துள்ளனர்.

அவனி லெகரா

இறுதிப்போட்டி மிகவும் சவாலானதாக இருந்தது. முதல் மூன்று பேருக்குமிடையே மிகக் குறைந்த அளவே வித்தியாசம் இருந்தது. முடிவினைப் பற்றி கவலைப்படாமல் எனது சிந்தனையில் கவனம் செலுத்தினேன். இந்த முறையும் இந்தியாவின் தேசிய கீதம் முதலாவதாக ஒலிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. போட்டிகளில் கவனம் செலுத்தி இந்தியாவுக்காக மேலும் பதக்கங்களை வெல்ல விரும்புகிறேன்.

மோனா அகர்வால்

போட்டி மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், வெற்றி பெற்றுவிட்டேன். அவனி லெகரா உடனிருந்தது மிகுந்த உதவியாக இருந்தது. அவர் ஒரு சாம்பியன். அவர் எனக்கு ஊக்கமளிக்கிறார்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்