பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பிரேசிலின் மார்செலோ மெலோ – ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பிரேசிலின் மார்செலோ மெலோ – ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.